இரத்தம் - Couverture souple

வி.எஸ்.ரோமா

 
9781639041213: இரத்தம்

Synopsis

உடலின் உடற்செல்களுக்குத் தேவையான எரிபொருளை (ஆக்சிஜன்) சுமந்து செல்பவை இரத்தமே. செல்களில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்காக நுரையீரலுக்கு சுமந்துவரும் துப்புரவு பணியாளரும் இரத்தமே நமது இரத்தத்தில் பிளாஸ்மா, சிவப்பணு, வெள்ளையணு, இரத்தத்தட்டுக்கள் இவற்றுடன் சில ஆன்டிஜென் (antigen), சில ஆன்டிபாடி (antibody) இவைகளும் இருக்கின்றன. இவற்றின் அடிப்படையில் நம் இரத்தம் வகைப்படுத்தப் படுகிறது எந்த வகை ஆன்டிஜென் நம் இரத்தத்தில் இருக்கிறதோ, அதுவே நமது இரத்த வகையாகும். A வகை ஆன்டிஜென் இருந்தால் A வகை இரத்தம். B வகை ஆன்டிஜென் இருந்தால் B வகை இரத்தம். இரண்டும் இருந்தால் AB வகை இரத்தம். இரண்டும் இல்லையெனில், O வகை இரத்தம். எந்த வகை ஆன்டிஜென் நம் ரத்தத்தில் உள்ளதோ, அதன் எதிர் வகை ஆன்டிபாடி நம் ரத்தத்தில் இருக்கும். ஒரே வகை ஆன்டிஜென் மற்றும் ஆன்டிபாடி கலந்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இரத்தத்தை உறையச் செய்து இரத்த ஓட்டத்தை நிறுத்தி விடும். இதனால்தான் இரத்தவகை அறிந்து பரிமாற்றம் செய்வது அவசியமாகிறது.

Les informations fournies dans la section « Synopsis » peuvent faire référence à une autre édition de ce titre.