Articles liés à லாபிஸ் லா&#x...

லாபிஸ் லாசுலி: பூர்வ ஜென்ம புதிர் / Poorva Jenma Puthir - Couverture souple

புன்னைவனம் சங்கர்

 
9798904319670: லாபிஸ் லாசுலி: பூர்வ ஜென்ம புதிர் / Poorva Jenma Puthir

Synopsis

வெள்ளத்தில் விழுங்கப்பட்ட ஒரு நகரம்.காலத்தின் இருளில் தொலைந்த ஒரு காதல்.நூற்றாண்டுகள் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் ஒரு ரகசியம். பண்டைய நதி நாகரிகம், தொற்றும் பேரழிவும் சேர்ந்து சிதைந்தபோது, மறக்கப்பட்ட ஒரு வம்சத்தின் கடைசி வாரிசாகப் பிறந்த குழந்தையை காக்க இருந்தது லாபிஸ் லாசுலி எனப்படும் மர்ம நீலக்கல் மட்டுமே. தலைமுறைகள் கடந்தபின், அந்த இரத்த வழி மீண்டும் ‘ஆதி’ என்ற இளம் வீரனாக எழுகிறது, அராஜகம், துரோகம், விதி ஆகியவற்றோடு மோதுவதற்காக. ஆனால் விதியின் கொடூரத்தை காதலால் கூட வெல்ல முடியாது; மீகலையுடன் அவனுடைய காதல் வன்முறையாலும் பெருவெள்ளத்தாலும் சிதறடிக்கப்படுகிறது. நூற்றாண்டுகள் கழித்து… பூமிக்கடியில் புதைந்த நாகரிகத்தின் சுவடுகளைத் தேடி செங்கட்டூரணிக்கு வருகிறான் தொல்லியல் ஆய்வாளன் குமரன். ஆனால் அவனை எதிர்கொள்வது இடிபாடுகள் மட்டும் அல்ல, விளக்கமளிக்க முடியாத நிகழ்வுகள், தொன்மையின் நினைவுகள், மேலும் வேறொரு பிறவியிலிருந்தே அவனை அறிந்திருப்பது போலத் தோன்றும் ஒரு ஏழைப் பெண், செண்பகம். மறக்கப்பட்ட புராணங்கள் விழித்தெழ, புனித மண்ணுக்கடியில் மறைந்திருக்கும் நாகமணியை நோக்கி பேராசை மனிதர்களைத் தள்ளிச் செல்ல, வரலாறு, புராணம், மறுபிறவிக் காதல், மூன்றும் மோதும் மர்ம சுழலுக்குள் குமரன் இழுக்கப்படுகிறான். ஆயிரமாண்டுகளைத் தாண்டி விரியும் லாபிஸ் லாசுலி, காதல், இழப்பு, விதி, மறக்க மறுக்கும் கடந்தகாலம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு உணர்வுபூர்வமான கதை. சில கதைகள் காலத்தால் புதைக்கப்படுகின்றன.சில கதைகள் மீண்டும் நினைவுகூரப்பட காத்திருக்கின்றன.

Les informations fournies dans la section « Synopsis » peuvent faire référence à une autre édition de ce titre.

Vos droits au titre de la garantie légale : Chaque consommateur de l'UE bénéficie d'au moins deux ans de protection au titre de la garantie légale pour tout bien de consommation vendu dans l'UE. Voir plus