Articles liés à அவரால் நா&#x...

9798906730749: அவரால் நான்

Synopsis

"அவரால் நான்" ஒரு மகளுக்கும் அவளுடைய அப்பாவுக்கும் இடையிலான அழகான உறவைப் பற்றிய நூல். பிள்ளைகளுக்காகத் தனது ஆசைகளை ஒதுக்கி வைத்து, அவர்களின் கல்விக்காகக் கஷ்டப்பட்டு, அவர்கள் தடுமாறும்போது நம்பிக்கை கொடுத்து, எதையும் எதிர்பார்க்காமல் அவர்களுக்காக வாழும் ஒரு தந்தையின் வாழ்க்கையை ஒரு மகளின் பார்வையில் இந்த நூல் பதிவு செய்கிறது.

சிறு வயதில் அப்பா செய்த பல விஷயங்கள் அவளுக்கு சாதாரணமாகத் தோன்றின. ஆனால் வளர வளர, அந்தச் செயல்களின் பின்னால் இருந்த அன்பும் தியாகமும் அவளுக்குப் புரியத் தொடங்கியது. அவளுடைய ஒவ்வொரு கனவுக்கும் பின்னால் அவர் வைத்திருந்த நம்பிக்கையையும், அவள் சந்தித்த ஒவ்வொரு சிரமத்திலும் அவர் கொடுத்த துணையையும் நினைத்துப் பார்க்கிறாள்.

"நான் யார்? யாரால் நான்?

என் அறிவா? என் திறமையா?"

என்ற கேள்விக்கான பதிலைத் தேடும் போது, அவளுக்குப் புரியும் உண்மை ஒன்றுதான்-"அவரால் நான்."இது ஒரு தந்தையின் கதை மட்டுமல்ல. தன் பிள்ளைகளுக்காக அமைதியாக வாழ்ந்து, அவர்களின் மகிழ்ச்சியிலேயே தனது மகிழ்ச்சியைத் தேடும் ஒவ்வொரு அப்பாவின் அன்பிற்கும் ஒரு சிறிய நன்றியாக இந்த நூல் அமைகிறது.

Les informations fournies dans la section « Synopsis » peuvent faire référence à une autre édition de ce titre.