இரைப்பை மற்றும் குடல்களை சீராக இயங்க வைத்து செரிமானத்திற்கு வழிவகை செய்கிறது. சருமப் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக கொத்தவரங்காய் பயன்படுகின்றது. கொத்தவரங்காயை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைவதற்கு பயன்படுகிறது. கொத்தவரையில்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,அபரிமிதமான விட்டமின் ‘ஏ’ சத்தும், விட்டமின் ‘சி’ சத்தும், விட்டமின் ‘கே’ மற்றும் “போலேட்ஸ்” ஆகியன அடங்கியுள்ளன. கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த ஓட்டம் சீராகி இதய அடைப்பு தடைபடுகிறது. சர்க்கரை நோயை தணித்த ரத்த அழுத்தம் குறைகிறது. உணவுப்பாதை மற்றும் ஆசனவாய் புற்றுநோய் தவிர்க்கும் வல்லமை கொத்தவரங்காய்க்கு உண்டு. உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்.